டிரெண்டிங்

தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

சென்னை காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், துறைமுகத்தை தனியார் மயமாக்குவது மாநில நலனுக்கு
எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். நாடு மற்றும் மாநில வளர்ச்சிக்காக காமராஜர் துறைமுகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய அனுமதிக்க வேண்டும் என்றும்,
அதேபோல அதில் பணிபுரியம் ஊழியர்களின் நலனை கருதி தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் நிதின் கட்கரிக்கு ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார். மேலும் லாபகரமான துறைமுகத்தை தனியார் மயமாக்குவது தமிழக நலனுக்கு எதிரானது என்றும், திமுக ஆட்சியின்போது எண்ணூர்
துறைமுகத்திற்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.