டிரெண்டிங்

மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

webteam

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், திருச்சி சிவா, ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யநாத் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் தலா மூன்று எம்.பி-க்களை பிரித்துக்கொள்ள முடியும்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கூட்டணி கட்சிகள் சீட் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் களமிறங்க போகும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவுக்கு 4வது முறையாக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வாய்ப்பு கொடுத்த திமுகவுக்கு நன்றி எனவும் திமுகவில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம் எனவும் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.