டிரெண்டிங்

"தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும், பழனிசாமியும் ஒன்றுதான்" - தினகரன் காட்டம்

"தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும், பழனிசாமியும் ஒன்றுதான்" - தினகரன் காட்டம்

Veeramani

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் என வாக்காளர்களுக்கு புரிய வைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி முத்திரை பதிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம்,குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சியை பிடித்த திமுக இப்போது நிதிநிலைமை சரியில்லை என மக்களை ஏமாற்றுகிறது.

பொய்மூட்டைகளோடும், பண மூட்டைகளோடும் வரும் ஸ்டாலின் மற்றும் பழனிசாமி கம்பெனி வேட்பாளர்களைப் புறக்கணித்து, எதற்கும் விலை போகாத, லட்சியத்திற்காகவும், மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்கு "பிரஷர் குக்கர்" சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு புரியவைப்போம்" என தெரிவித்துள்ளார்