மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, இந்திய மக்களின் தாய்மொழி இந்தி என்று கூறியதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்பு, அ.தி.மு.க குதிரை பேரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பற்றி உரையாற்றினார். அப்போது, வெங்கைய நாயுடு குறித்து பேசிய ஸ்டாலின், ‘இந்திய மக்களின் தாய்மொழி இந்தி என்று நிகழ்ச்சி ஒன்றில் வெங்கைய நாயுடு பேசியுள்ளார். ஆந்திராவில் பிறந்த வெங்கைய நாயுடு, தன் தாய்மொழியை எப்போது மாற்றினார்? தாய்மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவதற்குச் சமம்’ என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.