டிரெண்டிங்

SRH vs KKR : சென்னை மைதானத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் ஹர்பஜன்!

SRH vs KKR : சென்னை மைதானத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் ஹர்பஜன்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவரை அந்த அணி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற மினி ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை தொகையான 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதற்கு முன்னதாக மும்பை இண்டியன்ஸ் (2008 - 2017) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (2018 - 2020) அணிகளுக்கு ஹர்பஜன் விளையாடி உள்ளார். இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக முதல்முறையாக அவர் விளையாட உள்ளார். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் விளையாடுகிறார். 

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 161 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் டீசன்டான ஸ்டிரைக் ரேட்டும் அவர் கொண்டுள்ளார். கடைசியாக தொழில்முறை கிரிக்கெட்டில் ஹர்பஜன் மும்பை அணிக்கு எதிரான 2019 ஐபிஎல் பைனலில் சென்னை அணிக்காக விளையாடி இருந்தார். கிட்டத்தட்ட 699 நாட்களுக்கு பிறகு களம் காண்கிறார். கொல்கத்தா அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன் என அவர் சொல்லியுள்ளார். 

சென்னை அணியில் விளையாடியபோது தமிழில் ட்வீட் செய்து பலரையும் அவர் கவர்ந்திருந்தார்.