டிரெண்டிங்

“ரொம்ப வருத்தமா இருக்கு” - காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து நடராஜன் விலகல்!

“ரொம்ப வருத்தமா இருக்கு” - காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து நடராஜன் விலகல்!

EllusamyKarthik

மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடாமல் விலகுகிறார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். இதனை அந்த அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

“நான் நடராஜன். நான் இந்த வருஷம் ஐபிஎல் சீசன்ல மொத்தமா மிஸ் செய்றேன். போன சீசன்ல நல்ல விளையாடி, அதன் மூலம் இந்தியா டீம்ல ஆடி இருந்தேன். இந்த சீசன ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்து இருந்தேன். துரதிர்ஷ்டவசமா காயத்துனால விளையாட முடியாம போச்சு. அந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்தாகணும். ரொம்ப வருத்தமா இருக்கு. அணி நிர்வாகத்திற்கும், சக வீரர்களுக்கும் நன்றி. இனி வரும் போட்டிகளில் ஹைதராபாத் அணி வெற்றி பெற வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த சீசனில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே நடராஜன் விளையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் மீண்டு வாங்க நடராஜன் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.