டிரெண்டிங்

3 போட்டிகளில் தொடர் தோல்வி... இன்றாவது வெற்றி பெறுமா ஹைதராபாத்? - பஞ்சாப் உடன் மோதல்

3 போட்டிகளில் தொடர் தோல்வி... இன்றாவது வெற்றி பெறுமா ஹைதராபாத்? - பஞ்சாப் உடன் மோதல்

jagadeesh

ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கும் போட்டியில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களம் காண்கிறது. அதேபோல தங்களது முதல் போட்டியில் வெற்றிப் பெற்ற பஞ்சாப் அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகிறது. எனவே இன்றையப் போடட்யில் இவ்விரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே ஆகியோரை மட்டுமே நம்பி இருக்கிறது. இவ்வீரர்கள் ஆட்டமிழந்தவுடன் வரிசையாக அனைவரும் ஆட்டமிழக்கும் வகையில் பரிதாபமாக இருக்கிறது ஹைதராபாத் அணி. எனவே பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் நிலையில் இருக்கிறது ஹைததராபாத். அதனால் பேட்டிங் வரிசையில் சில மாறுதல்கள் ஏற்படலாம் என தெரிகிறது. பவுலிங்கை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், நடராஜன், ரஷீத் கான் ஆகியோர் தரமான பந்துவீச்சாளராக இருந்தாலும் முழு அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்தாதது ஹைதராபாதுக்கு பின்னடைவு.

பஞ்சாப் அணி கடைசி இரு ஆட்டங்களில் தோற்றுள்ளதால், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காணும். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய அந்த அணியின் பேட்டிங், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலால் மீண்டது. எனினும், அந்த அணியின் பவுலர்கள் சொதப்பியதால் வெற்றி பறிபோனது.

போட்டியை சொதப்புவதில் ஹதராபாத் - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் சம அளவில் இருப்பதால், இன்றையப் போட்டியில் எந்த அணி அதிகமாக சொதப்பி மற்றொரு அணிக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.