டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 25 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அஸ்வின்ஸ்

kaleelrahman

பெரம்பலூரில் துளிர்க்கும் நம்பிக்கை செயல்பாட்டின் மூலம் மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 25 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கே.ஆர்.வி.கணேசன் நிவாரணப்பொருட்கள் மற்றும் தலா 1000 ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணற்றோர் நிவாரணப் பொருட்களை பெற்று வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பெரம்பலூரில் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் பலர் உதவிகளை பெற்றுள்ளனர். இந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கொரோனாவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக புதிய தலைமுறையிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் அதன் தலைவர் கே.ஆர்.வி.கணேசன் கலந்து கொண்டு 25 குடும்பங்களுக்கு அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மேலும் தலா 1000 ரூபாய் நிதி உதவியையும் வழங்கி நம்பிக்கையூட்டினார். நிவாரண உதவியை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய தலைமுறைக்கும்,அஸ்வின்ஸ் குழுமத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.