டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜிஎம்.அசோசியேட்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜிஎம்.அசோசியேட்

kaleelrahman

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் மாற்றுத்திறனாளிக்கு ஜி.எம்.அசோசியேட் மூலம் உதவிக்கரம் நீட்டப்பட்டது.

ராமநாதபுரம் அருகே தங்கப்பா நகரை சேர்ந்தவர் தேவன். இவர், தனது மனைவி திலகவதியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளியான தேவன், தனது மிதிவண்டி மூலம் தெருத் தெருவாக சென்று டீ விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்திவந்தார்.

இந்நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மிதிவண்டியில் சென்று டீ விற்கவும் முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜி.எம்.அசோசியேட் குரூப்பை சேர்ந்த மெய்கண்டன், கிருஷ்ணமூர்த்தி, திஷான்குமார் ஆகியோர் தங்களது சொந்த பணத்தில் இருந்து 25 கிலோ அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் பணமும் கொடுத்து உதவி செய்தனர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளி தேவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும், உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.