டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: போன் செய்த மாற்றுத்திறனாளிக்கு தேடிச்சென்ற நிவாரணம்

துளிர்க்கும் நம்பிக்கை: போன் செய்த மாற்றுத்திறனாளிக்கு தேடிச்சென்ற நிவாரணம்

kaleelrahman

துளிர்க்கும் நம்பிக்கைக்கு தொலைபேசி செய்தார் செஞ்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமர். வீடுதேடி சென்று புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை அவருக்கான உதவியை செய்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ராமர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாக புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராமர் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வசிக்கும் கெங்கவரம் கிராமத்திற்கு துளிர்க்கும் நம்பிக்கையுடன் செஞ்சி நண்பர்கள் குழுவினர் இணைந்து அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நேரில் சென்று வழங்கினார்.

தங்களை தேடிவந்து தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய புதிய தலைமுறைக்கு ராமர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். அத்துடன் இதுபோன்ற உதவிகள் செய்வது தங்களுக்கு மன திருப்தியாக இருப்பதாகவும் செஞ்சி நண்பர்கள் குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் இந்த செயலில் ஈடுபட்டு வரும் புதிய தலைமுறைக்கு தங்களுடைய பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.