டிரெண்டிங்

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் ஸ்பெத்தோடியா மலர்கள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

kaleelrahman

நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பூத்துக்குலுங்கும் ஸ்பெத்தோடியா எனும் சேவல் கொண்டை மலர்கள் இங்குவரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும், மலைகளுக்கு இடையேயும் தேயிலை தோட்டங்களுக்கு இடையிலும் பூத்துக் குலுங்கும் 'ஸ்பெத்தோடியா’ என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்களின் சீசன் தற்போது களை கட்டியுள்ளதால், சாலையில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


இந்த மலர்கள் நீலகிரியின், இரண்டாம் சீசன் காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மிக அதிக அளவில் பூத்துக்குலுங்கும், சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலர்ந்துள்ள இந்த மலர்களால் குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது, மேலும் ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள் ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.


நீலகிரியில் தற்போது இரண்டாம் சீசன் நடைபெற்று வரும் நிலையில் சேவல் கொண்டை மலர்கள் சாலை ஓரத்தில் பூத்து குலுங்குவது, சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.