டிரெண்டிங்

இராகு கேது பெயர்ச்சி - திருநாகேஸ்வரத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

webteam

இராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு இராகு பரிகார தலமான திருநாகேஸ்வரத்தில் ஸ்ரீராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேங்கள் தொடங்கியது.

18 மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி இடம்பெயரும் கிரங்களான ராகு-கேது பெயர்ச்சி இன்று 2.16 மணிக்கு நடைபெற்றது. மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இராகு பகவான் பெயர்ச்சியாவதை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுது. நேற்று முன்தினம் நான்கால பூஜைகளுடன் தொடங்கி தினமும் லட்சார்சசனைகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை முதல் சிறப்பு யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீநாகவள்ளி மற்றும் ஸ்ரீநாக கன்னி சமேத ஸ்ரீராகுபகவானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கொரோனா தடை உத்தரவுக்கு பிறகு இன்று கோயில் திறக்கப்பட்டதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்தனர்.

ஆனாலும் பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ராகு பெயர்ச்சியை பக்தர்கள் கண்டு ரசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தடை உத்தரவு தளர்த்தப்பட்டதால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சகம், மகரம், தனுஷ் ஆகிய ரிசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட லட்சார்ச்சனைகள் வருகிற 4 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் நேரிடையாகவோ அல்லது வங்கிகள் மூலமாக பணம் செலுத்தி லட்சார்சனையில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட நாகநாத சுவாமி ஆலயம் அமைந்துளள்ளது. அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்த தலத்தில் கிரிகுஜாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி அருள்பாலிக்கிறார். இராகு பரிகார தலமாக விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடதக்கது.