டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கக் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அரசு கொறடா பரிந்துரை செய்ததின் அடிப்படையில் சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சரை மாற்ற வேண்டும் எனவும், அவர் மீது நம்பிக்கை இல்லை எனவும் கூறி ஆளுநரிடம் மனு அளித்தனர். அந்த 19 எம்எல்ஏக்களும் தற்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 19 பேரையும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த 19 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வன், தங்களுக்கு ஆளுநர் அனுப்பிய நோட்டீஸ் கிடைக்கவில்லை எனவும், மிரட்டலுக்குப் பயப்படமாட்டோம் எனவும் தங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.