இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேரை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்க 75-வது ஆண்டு மக்களவை சிறப்புக் கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் மதச்சார்பின்மையும் கருத்து சுதந்தரமும் பேராபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் சோனியா குற்றம்சாட்டினார். போராடிப்பெற்ற சுதந்தரத்தை பேணிக்காக்க வேண்டுமென்றால் அது எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை முறியடிக்க வேண்டியது அவசியம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுட்டிக்காட்டினார்.