டிரெண்டிங்

சோனியா, ராகுல், பிரியங்கா, அசோக் கெலாட்: காங்கிரஸ் நட்சத்திர பரப்புரையாளர் பட்டியல்

Veeramani

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தலின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்க்கே, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.வீரப்ப மொய்லி, டி.கே.சிவகுமார், மணிஷ் திவாரி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், சஞ்சய் தத் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அண்மையில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரின்பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த நட்சத்திர பரப்புரையாளர்கள் எப்போது தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.