டிரெண்டிங்

ரஜினி மக்கள் மன்ற லோகோவில் பாம்பு நீக்கம்! காரணம்?

ரஜினி மக்கள் மன்ற லோகோவில் பாம்பு நீக்கம்! காரணம்?

webteam

ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவில் இருந்த பாம்பு படம் நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்களை
மன்றத்துக்குள் இணைக்கும் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதற்காக இணையதளம் மற்றும் ட்விட்டர் கணக்குகள்
தொடங்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் என செயல்பட்டு வரும் இதன் லோகோவில் முதலில் பாபா முத்திரையுடன் பாம்பு ஒன்று
சுற்றியிருக்கும் படி இருந்தது. ஆனால் ரஜினி ரசிகர்களை சந்தித்த போது இருந்த லோகோவில் தாமரை இருந்தது. பாஜகவுடன்
ரஜினியை இணைத்து பேசும் சர்ச்சை எழுந்ததால், ரஜினி தாமரையை இந்த லோகோவில் போடாமல் வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் லோகோவில் இருந்த பாம்பு, ராமகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் லோகோவில் இருக்கும் பாம்பு, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக உள்ளது என மன்றத்தின் தென்மாவட்ட நிர்வாகிகள்
கூறியுள்ளனர். அவர்களின் கருத்தை ஏற்று பாம்பு படத்தை நீக்க ரஜினி உத்தரவிட்டார். அதன்படி லோகோவில் இருந்து பாம்பு நீக்கப்பட்டுள்ளது.