டிரெண்டிங்

கர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை

கர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை

rajakannan

நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகே கர்சன் டீ‌ எஸ்டேட் தொழிற்சாலையில் 6-வது நாளாக வருமானவரித் துறையினரின் சோதனை தொடர்ந்தது. 

தற்போது 7 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும்‌ கோடநாடு எஸ்டேட்டின்‌ மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கர்சன் கிரீன் டி எஸ்டேட் வாங்கப்பட்டதற்கான நிதி குறித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தொழிற்சாலை ஊழியர்கள் பெயரில் வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்தும் நடராஜனிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றன. இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது.