விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜி அம்மா கண்ட கனவு ஜெயிக்க வேண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறிய பின்னர் ஜெயலலிதாவின் பல்வேறு சிறப்புகளை பேசிய ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
எனக்கென தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. அம்மாவின் செல்வாக்கை பெற்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எனக்கு சீட் வழங்கப்பட்டு நான் வெற்றி பெற்றேன். என்னை பிள்ளையை போன்று பார்த்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. அனைவரது இதயத்திலும் அம்மா நிழைத்திருக்கிறார். வெற்றி பெற்றால் மட்டுமே நாம் வேட்டி கட்டி நடக்க முடியும். நான் யாரையும் கெடுத்தேன் யாரையும் மாட்டி விட்டேன் என ஒருவர் கூட சொல்ல முடியாது.
கடமை உணர்வோடு கட்சி பேதமின்றி அனைவருக்கும் நான் உதவி இருக்கிறேன். ஒரு நாளும் எவரையும் கெடுப்பதற்கு என நான் கையெழுத்திட்டது கிடையாது. நான் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது ஒவ்வொரு மணி நேரமும் அம்மா அவர்கள் தொலைபேசியில் என் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். கட்சிக்கு துரோகம் நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது.
ஜெயலலிதா சிறைச்சாலை சென்ற பின் அவர் பாதி உயிர் பிரிந்துவிட்டது. சிறைக்கு சென்று வந்த பின்னர் வெளிநாடு சென்றிருந்தால் கூட இன்றுவரை அவர் உயிரோடு இருந்திருப்பார். கோடி கோடியாய் சம்பாதித்த கலைஞர் குடும்பம் உத்தமர் வேஷம் போடுகிறது. அம்மாவிற்கு பின்னர் கட்சி என்ன ஆகுமோ என நினைத்த நேரத்தில் எடப்பாடி என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த நான்கு ஆண்டுகள் கட்சியை வழி நடத்தி இருக்க முடியாது.
பட்டாசு தொழில் மீது இருந்த ஜிஎஸ்டி வரியை குறைக்க துணை நின்றவன் நான் கருத்துக்கணிப்புகள் கருத்துக்திணிப்புகள் ஆகவே மாற்றப்பட்டுள்ளது. நானும் ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளேன். சிவகாசியில் மினி கிளினிக்குகள் சோலார் லைட்டுகள் ஆர்டிஓ அலுவலகம் என பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி விட்டு சிவகாசியில் போட்டியிடாமல் இருப்பதற்கு நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சிவகாசியை கைவிட்டேன். அமைச்சர் என்ற முறையில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடலாம்.
ராஜவர்மனை ஜெயிக்க வைப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது எனக்கு தெரியும். வெற்றி பெற்ற மூன்றாவது மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா என கேட்டவர் அவர். ராஜவர்மனுடன் தொடர்பில் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்.
ஒன்பது கூட்டு குடிநீர் திட்டங்களை 10 ஆண்டு அமைச்சராக இருந்து கொண்டு வந்துள்ளேன். ராஜபாளையம் வெளிநாட்டில் இல்லை. அவர்களுக்கு சேவை செய்ய உள்ளேன். 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பேசினார்.