முடிவு எடுப்பது ஆளுநர் வாஜுபாய் கைகளில் தான் உள்ளது என்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, குமாரசாமி தெரிவித்தனர்.
பாஜக சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரை சந்தித்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் சந்தித்தனர். ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா,
“மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. மஜதவை ஆதரிக்கும் முடிவை மத்திய தலைமை எடுத்தது” தெரிவித்தார்.
குமாரசாமி பேசுகையில், “ஆட்சி அமைக்க உரிமை கோரியும், காங்கிரஸ் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளோம். எடியூரப்பாவுக்கு உரிமை இருக்கிறது அதனால் கேட்டிருக்கிறார். எங்களுக்கும் உரிமை இருக்கிறது நாங்களும் கேட்டுள்ளோம். ஆளுநர் தான் இனி முடிவு செய்ய வேண்டும்” என்றார்.