டிரெண்டிங்

குடும்பத் தகராறு: பாத்ரூமில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு...!

குடும்பத் தகராறு: பாத்ரூமில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு...!

kaleelrahman

சென்னையில் குடும்பத் தகராறில் மனைவியின் அக்காள் மகன் மீது துப்பாக்கி சூடு. துப்பாக்கியால் சுட்டவரும் காயமடைந்ததால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் சையது இப்ராஹிம்ஷா (57). இவர் மண்ணடியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரகத்துன்னிஷா (47). நேற்றிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது மனைவியின் அக்கா நஸியத் நிஷாவின் மகன் அன்சாருதீனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இப்ராஹிம்ஷா, தனது மனைவிக்கு ஏன் சப்போர்ட் செய்கிறாய் என்று கேட்டு அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. 


இதைத்தொடர்ந்து அன்சாரூதீன், சையது இப்ராஹிம் ஷாவின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு தனது 4 நண்பர்களுடன் சென்றபோது இப்ராஹிம்ஷா வீட்டின் உள்ளே உள்ள பாத்ரூமில் எற்கெனவே கையில் எடுத்து வைத்திருந்த தனது (B1 PS) ரிவால்வருடன் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் உள்ளே சென்ற அன்சாருதீன் பாத்ரூம் கதவை தட்டி திறக்குமாறு கூறியுள்ளார் .பிறகு உள்ளே இருந்தபடி கதவை பாதி திறந்து தனது கை துப்பாக்கியால் அன்சாருதீன் மீது சுட்டுள்ளார்.


இதில் அன்சாருதீனின் இடது உள்ளங்கையில் குண்டு பாய்ந்தது. அதேபோல சையது இப்ராஹிம்ஷாவின் இடது கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் அன்சாருதீன் அடிபட்ட கையுடன் மேலிருந்து கீழே ஒடிவந்து ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த சையது இப்ராஹிம் கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்சாரூதீனுடன் வந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். முஹம்மது ஆசிப் என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.