டிரெண்டிங்

வெறும் வாட்டர் பாட்டிலுக்காக உயிரை பணயம் வைக்க துணிந்த பெண் - அதிர்ச்சிகர வீடியோ!

JananiGovindhan

ரயில் வரும் பாதையான தண்டவாளத்தை கடக்கக் கூடாது என்றும், அவ்வாறு கடந்தால் உயிருக்கே ஆபத்து நேரும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்தாலும் நடைமேடை பாலத்தை பயன்படுத்தாமல் வேண்டுமென்றே மக்கள் ரயில்வே டிராக்கை கடந்து வருவது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

ரயில்வே டிராக்கில் நடந்து வருவதால் நேரும் ஆபத்துகள் என்னென்ன என்பது தொடர்பான வீடியோக்கள் பல சமூக வலைதளங்கள் வாயிலாக கிடைக்கப்பெற்றாலும் அவற்றை சாதாரண பதிவு போல கடந்து செல்வதே மீண்டும் மீண்டும் தண்டவாளங்களையே பயன்படுத்துவதற்கு சான்றாக இருக்கிறது.

ALSO READ: 

அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலுக்காக உயிரை துச்சமாக நினைத்து ரயில் முன் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய ரயில்வே டிராஃபிக் போலீஸான சஞ்சய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “பெண் ஒருவர் தண்டவாளம் வழியாக வந்து எதிர் திசையில் இருந்த நடைமேடையில் ஏற முயற்சித்திருக்கிறார். முடியாததால் அங்கிருந்த ரயில்வே ஊழியரை உதவிக்கு அழைத்திருக்கிறார். இதனைக் கண்டவர் உடனடியாக வந்து அப்பெண்ணை இழுத்திருக்கிறார்.

அவர் மேலே வந்த சில நொடிகளிலேயே விரைவு ரயில் ஒன்று அவ்வழியே வரவும் மேலே வந்த அப்பெண் உடனடியாக நடைமேடை முனையில் வைத்த தண்ணீர் பாட்டிலை எடுக்க முற்பட்டிருக்கிறார். இதனைக் கண்டதும் அங்கிருந்த ரயில்வே போலீஸ் அவரை கண்டித்திருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது.”

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், வெறும் தண்ணீர் பாட்டிலுக்காக காப்பாற்றப்பட்ட உயிரை மீண்டும் மாய்த்துக்கொள்ள நினைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.