மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை கிரிமினல் என கூறிய மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான், செய்தியாளர் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். காஷ்மீர் விவகாரத்தை ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் குறித்து விமர்சனம் செய்த சௌஹான், ஜவஹர்லால் நேருவை கிரிமினல் எனக் கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.