டிரெண்டிங்

சிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

சிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

webteam

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, சென்னை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை போன்று, சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதிமன்ற உத்தரவி‌ன் அடிப்படையில் சிவாஜி சிலையை மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.