டிரெண்டிங்

அபாகஸ் முறை புதிய வடிவில் விரைவில் அறிமுகம்: செங்கோட்டையன்

அபாகஸ் முறை புதிய வடிவில் விரைவில் அறிமுகம்: செங்கோட்டையன்

Rasus

தமிழக அரசுப் பள்ளிகளில் அபாகஸ் முறையில் கணிதப் பாடம் கற்கும் வசதி புதிய வடிவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபாகஸ் முறையில் கணித பாடம் கற்கும் வசதி அடுத்த மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதன் மூலம் மாணவர்களின் கணிதத்திறன் மேம்பட்டு கணிதபாடத்தில் முழு அளவில் மதிபெண்கள் பெற்று வெற்றிபெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  இதனையடுத்து நம்ம கோபி பவுண்டேசன் என்ற அமைப்பினர் சார்பில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு செங்கோட்டையன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.