டிரெண்டிங்

நடிகர் கமலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்லூர் ராஜூ ஆரூடம்

நடிகர் கமலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்லூர் ராஜூ ஆரூடம்

webteam

நடிகர் கமல்ஹாசனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கமல் அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கமல்ஹாசனின் அரசியல் வருகையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், எம்.ஜி.ஆரை தவிர அந்தப் புகழ் வேறு எந்த நடிகர்களுக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 

விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கமல் குறிப்பிட்டிருந்தது கவனத்திற்குரியது.