மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி செல்லூர் ராஜுக்கு இல்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கிடையாது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத அதிமுகவினருக்கு தங்களை குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் சாடினார்.
முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ, மு.க.ஸ்டாலின் தலைமையில் இருப்பதால் எதிர்க்கட்சி வலுவற்ற நிலையில் இருப்பதாக கூறினார். இதனால் தற்போதுள்ள எதிர்க்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஸ்டாலின் சுயமாக செயல்படக்கூடியவர் இல்லை என்றும், அவரை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.