திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிப்பெரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே மாடங்குளம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்பகுதி மக்களின் குடிநீர், மற்றும் விவசாயப்பணிகளுக்காக இக்கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் இக்கண்மாயின் கரைகள் உயர்த்தப்பட்டு தேவையான தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.
Read Also -> திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா போட்டி?
மேலும் டிடிவி தினகரன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு “டிடிவி தினகரன் தன்னுடன் இருப்பவர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக அவ்வாறாக பேசி வருகின்றார். நாங்கள் திமுகவையே ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை, அதுபோலதான் டிடிவி தினகரனனும், இரட்டை இலையும் அம்மாவும் தான் மக்களின் எண்ணம், கடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றோம். அதேபோல வரும் தேர்தலில் வனத்துறறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது போல ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெருவோம்” என இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவது மட்டுமே தமிழக அரசின் நிலைபாடாக உள்ளது. அதேபோல தூத்துக்குடி மக்களின் எண்ணம்போல இந்த அரசு செயல்பட்டு வருகின்றது எனவும் அப்போது தெரிவித்தார்.