டிரெண்டிங்

தாலிக்கு தங்கமும் சாதனை; குடிக்க வெச்சு பெண்களின் தாலியை இழக்க வெச்சதும் சாதனை - சீமான்

தாலிக்கு தங்கமும் சாதனை; குடிக்க வெச்சு பெண்களின் தாலியை இழக்க வெச்சதும் சாதனை - சீமான்

Sinekadhara

’’தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுத்தது சாதனை என்றால் மக்களை குடிக்கவைத்து 2 லட்ச பெண்களின் தாலியை இழக்கவைத்தது தமிழக அரசின் சாதனைதான்’ என பனப்பாக்கத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள சீமான் பேசியிருக்கிறார். 

நாம் தமிழர் கட்சியின் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பாவேந்தரை ஆதரித்து பனப்பாக்கம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவரை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் ஒன்றிணைந்து சிலம்பாட்டம் மூலமாக வரவேற்றனர். பின்னர் திறந்த வேனிலிருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அங்கு பேசிய சீமான், ‘’தமிழகத்தில் விவசாய வேலை அரசு வேலையாக அறிவிக்கப்படும். இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம், கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுபிரான் என அனைவரும் ஆடுமாடுகள் மேய்த்தவர்கள்தான்; அப்போது ஏன் நீங்கள் எல்லாம் ஆடு, மாடு மேய்க்கக்கூடாது’’ எனப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து ’’ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாம் தமிழர் கட்சி தற்போது தனித்து போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மாடுகள் மூலமாக பால் விற்பனையில் 3 லட்சம் கோடி வருவாய் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து ஆண்டு ஒன்றுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்கிறது’’ எனக் குற்றம் சாட்டினார்.

மேலும், ‘’ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தெருவுக்கும் 2 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளனர். தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுப்பது சாதனை என்றாலும் டாஸ்மார்க் கடை மூலமாக 2 லட்சம் பெண்களின் தாலியை இழக்க வைப்பதும் தமிழக அரசின் சாதனைதான்’’ என தமிழக அரசை சரமாரியாக குற்றம் சாடினார் பேசினார்.