நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆலப்பாக்கத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி பள்ளயில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் காத்திருந்து அவர் தனது ஜனநாயக் கடமையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேச துரோக குற்றம். எனவே அனைவரும் சரி, தவறு உணர்ந்து நல்லவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் யாருக்கும் ஆதரவு கிடையாது. தோற்றாலும் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வோம் என்று கூறினார்.