கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனை சாத்தான்குளம் காவல்துறை டிஎஸ்பியாக நியமித்து காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஏடிஎஸ்பி கோபி, தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், சாத்தான்குளம் சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார், நீலகிரி மாவட்ட ஏடிஎஸ்பி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஎஸ்பி பிரதாபன் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர சாத்தன்குளத்தின் புதிய டிஎஸ்பியாக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனை டிஜிபி திரிபாதி நியமித்துள்ளார்.