டிரெண்டிங்

சசிகலாவின் பரோல் நிபந்தனைகள்!

சசிகலாவின் பரோல் நிபந்தனைகள்!

webteam

5 நாட்கள்கள் பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு, ஊகடங்களில் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சசிகலாவின் பரோல் நிபந்தனைகள்:
சசிகலா வீட்டில் இருந்து கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை, மருத்துவமனையிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். 
பரோல் காலத்தில் வீட்டிலோ, மருத்துவமனையிலோ பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது. 
அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. 
கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 
பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தினரை சந்தித்துப் பேசக்கூடாது. 
இந்த நிபந்தனைகளை கர்நாடக மாநில சிறைத்துறை சசிகலாவுக்கு விதித்துள்ளது.