ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா என்பதால்தான் அதுபற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியின் 22வது வார்டுக்கு உட்பட்ட மல்லிகைபுரத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன உடற்பயிற்சி கூடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா தான் என்றும் அதற்காக தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத டிடிவி தினகரன் ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.