சசிகலாவின் பரோலுக்காக ரிட் மனு தாக்கல் செய்யவுள்ளதாக, அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சசிகலாவின் பரோலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் இடையில் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. ஏனென்றால், பரோலுக்கு விண்ணப்பித்த போது நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்று கூறினார்கள். பிறகு சிகிச்சை பெற்று வரும் நடராஜனை பார்த்துவிட்டு, பரோலை அனுமதிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் 4 நாட்கள் முடிந்த பின், நேற்றும் பரோலை அனுமதிக்கவில்லை, இன்றும் அனுமதிக்கவில்லை. இதனால் சசிகலாவின் பரோலுக்காக ரிட் மனு தாக்கல் செய்யவுள்ளோம். எனவே எப்படி இருந்தாலும் சசிகலாவை பரோலில் வெளியே கொண்டுவந்து விடுவோம்.” என்று கூறினார்.