சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று காலை திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு முன், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத்குமார், அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.