50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வதே பாஜகவின் இலக்கு என அமித் ஷா கூறியதற்கு சரத் பவார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்யவரவில்லை என்றும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆட்சி தொடரவே தாங்கள் திட்டம் வகுத்து வருவதாகவும், அதுதான் பாஜகவில் உள்ள அனைவரின் இலக்கு என்று அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். "அரசியலை விட்டு அதித்ஷா ஜோதிடராகி விட்டாரா" என கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வளவு காலம் ஒரு கட்சி பதவியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதனை ஒரு கட்சியின் தலைவர் முடிவு செய்ய முடியாது என சரத் பவார் கூறியுள்ளார்.