டிரெண்டிங்

பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை ரஞ்சனா நாச்சியார்

பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகை ரஞ்சனா நாச்சியார்

kaleelrahman

சேலம் மாநகராட்சி 46 வது வார்டு பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்த புகழ் ரஞ்சனா நாச்சியார் வாக்கு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி 60 கோட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலம் மாநகராட்சி 46-வது கோட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவியை ஆதரித்து அண்ணாத்த பட புகழ் ரஞ்சனா நாச்சியார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

46வது கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரஞ்சனா நாச்சியார் வீடு வீடாகச் சென்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.