டிரெண்டிங்

சீமான் ஒரு நமத்துப் போன ஊசி பட்டாசு : எஸ்.வீ. சேகர் விமர்சனம்

சீமான் ஒரு நமத்துப் போன ஊசி பட்டாசு : எஸ்.வீ. சேகர் விமர்சனம்

webteam

தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும்; ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் சீமானைக் கண்டிக்கும் விதமாக, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வீ. சேகர், நமத்துப் போன ஊசிப் பட்டாசு என்று விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது நியாமில்லாதது. ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்போம் என்று தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இதுபற்றி கருத்துக் கூறியது சீமான், “ரஜினிகாந்த் வெடிக்காத ஊசிப் பட்டாசு ஆகிவிடுவார்” என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜகவின் எஸ்.வீ. சேகர், “நமத்துப் போன ஊசிப் பட்டாசின் அழுகை” என்று விமர்சித்துள்ளார்.

அவ்வப்போது அரசியல் கருத்துகளை ட்விட்டரில் தெரிவிக்கும் எஸ்.வீ. சேகர், தன்னையும், தன் குடும்பத்தினரையும் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களை, “தன்னை பெற்ற தாய், சகோதரி, மனைவி, பெற்ற பெண் இவர்களை மதிக்கத் தெரியாதவனே மற்ற வீட்டு பெண்களை கேவலமாக பேசுவான் எழுதுவான். அது ஒரு மனோ வியாதி” என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மற்றுமொரு ட்வீட்டில், எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை, “அரசாங்க வீட்டுக்கு வாடகை பாக்கிய முதல்ல கட்டுங்கம்மா” என்று கூறியுள்ளார். “அனைத்து மதத்தவர்களையும் அரவணைத்துச் செல்வது மிகவும் முக்கியம்” என்ற மீராகுமாரின் கருத்துக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.