அம்பேத்காரும், பெரியாரும் இன்று இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிருஷ்ணசாமி, “பெரியார், அம்பேத்கர் சித்தாந்தங்களை நான் சிதைக்கவில்லை. வளர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சாதியை ஒழிப்பதற்கான அம்பேத்கர் காட்டிய வழிமுறைகள் தற்போது பொருந்தாது.
மதங்களே அபினி எனும் போது, ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு செல்வது தீர்வாகாது. புத்த மதத்தில் பல்வேறு முற்போக்கு சிந்தனைகள் இருப்பதால் அம்பேத்கர் அதனை பரிந்துரை செய்தார். ஆனால் தற்போது பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அம்பேத்கரையும், பெரியாரையும் சுவீகரித்துக் கொண்டார். அதேபோல் பின்பற்றவில்லை” என்றார்.