டிரெண்டிங்

பணம், நகை பறிமுதல்... இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

பணம், நகை பறிமுதல்... இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

Rasus

தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ‌‌183 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே, தமிழகத்தின்தான் பணமும், தங்கமும் அதிக அளவில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை, 1‌‌83 கோடியே 21 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 284 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 602 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் 137 கோடியே 7 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 39 கோடி ‌‌ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும், இரண்டாயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.