டிரெண்டிங்

“ஒருநாளைக்கு 17 ரூபாயா?.. இது விவசாயிகளுக்கு அவமானம்” - ராகுல் சாடல்

“ஒருநாளைக்கு 17 ரூபாயா?.. இது விவசாயிகளுக்கு அவமானம்” - ராகுல் சாடல்

rajakannan

ஒரு நாளை 17 ரூபாய் அளிப்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல் தாக்கல் செய்தார். இதில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அமைச்சர் கோயல் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ‌விரைவில் சேர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒரு நாளை 17 ரூபாய் அளிப்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டரில், “மரியாதைக்குரிய நரேந்திர மோடி, உங்களுடைய 5 ஆண்டு திறமையற்ற, ஆணவமான ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள். மேலும், அவர்களுக்கு நாள் தோறும் ரூ17 கொடுத்துள்ளது அவமானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.