டிரெண்டிங்

ஸ்ரீபெரும்புதூர் : சிகரெட் பண்டல்களை ஏற்றிச்சென்ற லாரி கடத்தல்

ஸ்ரீபெரும்புதூர் : சிகரெட் பண்டல்களை ஏற்றிச்சென்ற லாரி கடத்தல்

webteam

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வழிப்பறி செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1.52 கோடி மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கூட்ரோடு பகுதியில் ஐடிசி நிறுவனத்தின் ரூ.1.52 கோடி மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்னை பெரம்பூர் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரியை, காரில் வந்த கும்பல் வழிமறித்ததாகவும், லாரி ஓட்டுநரை தாக்கி காரில் ஏற்றி கண்களை கட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே லாரி ஓட்டுநரை கீழே தள்ளிவிட்டு லாரியை அந்தகும்பல் கடத்தியதாக கூறப்படுகிறது. சாலையில் மயங்கி கிடந்த லாரி ஓட்டுனர் குமார், பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் ஓட்டுநர் குமார் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்ததையடுத்து அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.