கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஒரே நாளில் 1 கோடியே 16 லட்சம் ருபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை, 183 கோடியே 21 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு ஒரே நாளில் 1 கோடியே 16 லட்சம் ருபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 1 கோடியே 16 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் சூலூர் அருகே 68 லட்சமும், செட்டிபாளையம் பகுதி அருகே 44 லட்சம் மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.