டிரெண்டிங்

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்: ராஜஸ்தான் Vs பெங்களூர், சென்னை Vs டெல்லி

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்: ராஜஸ்தான் Vs பெங்களூர், சென்னை Vs டெல்லி

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ‌ராஜஸ்தான் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ரா‌ஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும், பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. மூன்று போட்டிகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ‌

ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி ‌7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌