டிரெண்டிங்

சிஎஸ்கேவின் வெற்றிக் கூட்டணி தொடருமா? எப்படி இருக்கப்போகிறது அணிகள்?

சிஎஸ்கேவின் வெற்றிக் கூட்டணி தொடருமா? எப்படி இருக்கப்போகிறது அணிகள்?

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

புகழ்பெற்ற ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சிஎஸ்கே இந்தப் போட்டியில் களம் காண்கிறது. 2008-இல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. அதன் பின்பு அந்த அணி ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை.

2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 8 ஆம் இடத்தையே பிடித்தது. இதனால் சிஎஸ்கேவுடனான முதல் போட்டியில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற இலக்கில் களமிறங்க இருக்கிறது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ். முதல் போட்டியில் வெற்றிப்பெற்றதால் சிஎஸ்கே அணியில் பெரியளவில் மாற்றம் இருக்காது; வெற்றிக் கூட்டணியை தோனி மாற்றாமல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன் படி:

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணி:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால்
ராபின் உத்தப்பா
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்)
டேவிட் மில்லர்
ஸ்ரேயாஸ் கோபால்
ராகுல் தெவாட்டியா
ஜோப்ரா ஆர்ச்சர்
ஒஷானே தாமஸ்
ஜெயதேவ் உனாத்கட்
மயாங்க் மார்கண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி:

ஷேன் வாட்சன்
முரளி விஜய்
டூப்ளசிஸ்
அம்பத்தி ராயடு
தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்)
கேதர் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
சாம் கரன்
தீபக் சஹார்
பியூஷ் சாவ்லா
லுங்கி என்கிடி