டிரெண்டிங்

“கோமாளிக்கு பொறுப்பு கொடுத்துள்ளார் ராகுல்” - கர்நாடக ரோஷன் போர்க்கொடி

“கோமாளிக்கு பொறுப்பு கொடுத்துள்ளார் ராகுல்” - கர்நாடக ரோஷன் போர்க்கொடி

rajakannan

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்எல்ஏவுமான ரோஷன் பெய்க் மாநில கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.‌

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோ‌ற்கும் பட்சத்‌தில் அதற்கு முன்னாள் முதல்வர்‌ சித்தராமையாவும் மாநில‌ காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுமே காரணமாக இருப்பார்கள் என ரோஷன் பெய்க் கூறியுள்ளார். ‌இருவரும் மாநிலத்தில் கட்சியை தவறான முறையில் வழி‌நடத்தி வருவதாகவும் பெய்க் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் மேற்பார்வையாளராக உள்ள கே.சி. வேணுகோபால் ஒரு கோமாளி என்றும் இவரை போன்றவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ராகுல் காந்தியை நினைத்து பரிதாபப்படுவதாகவும் பெய்க் தெரிவித்துள்ளார். 

முன்னதாக மத்தியில் பாரதிய‌ ஜனதா மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் ரோஷன் பெய்க் பேசியிருந்தார். ரோஷன் பெய்க்கின் இப்பேச்சுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காங்கி‌ரஸ் கட்சியை விட்டு விலகக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரோஷனுக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரசில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சி‌ மேலிட பார்வையாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூரு வந்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்‌சியமைக்க பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் ரோஷன் பெய்க்கின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில்,‌ கர்நாடக முதல்வர் குமாரசாமியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.