டிரெண்டிங்

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராபின் உத்தப்பா.!

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராபின் உத்தப்பா.!

JustinDurai

கொரோனா விதிமுறைகளை மீறி பந்தை எச்சிலை தொட்டு தேய்த்து உள்ளார் ராபின் உத்தப்பா.

13-வது ஐபிஎல் சீசனின் 12-வது ஆட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அசத்தல் பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா பீல்டிங் செய்யும் போது பந்தை எச்சில் தொட்டு தேய்த்து பவுலரிடம் கொடுத்தார். மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்த சம்பவம் நடந்தது.

கிரிக்கெட் போட்டியின்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை ஷைனிங் செய்வதற்காக எச்சில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் அதை பின்பற்றுவது போல தெரியவில்லை.

நேற்று முன்தினம் நடந்த டெல்லி – ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியின்போது டெல்லி அணியின் முக்கிய பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவும் எச்சிலை தொட்டு பந்தை தேய்த்து பின்னர் வீசினார். 

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ராபின் உத்தப்பா பந்தை எச்சில் தொட்டு தேய்க்க, அம்பயர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் விதிமுறைகள் மீறப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.