தம் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னர் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவிடம், லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கியதில், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராபர்ட் வதேரா தனது முகநூல் பதிவில், கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் பரப்புரை செய்த அனுபவம் தமக்கு இருப்பதாகவும், அமலாக்கத்துறை விசாரணை முடிந்த பின்னர் விரைவில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தம்மை அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உத்தரப் பிரதேச மக்களுக்கு உதவி செய்து சிறு மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாகவும், அவர்களின் அன்பை தாம் சம்பாதித்திருப்பதாகவும் முகநூலில் ராபர்ட் வதேரா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் அரசியலுக்கு வர இருப்பதை சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.