டிரெண்டிங்

போட்டியிட்டவர்களில் தினகரனிடம் தான் தகுதி உள்ளது: ஆர்.கே நகர் மக்கள் கருத்து

போட்டியிட்டவர்களில் தினகரனிடம் தான் தகுதி உள்ளது: ஆர்.கே நகர் மக்கள் கருத்து

webteam

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது தொடர்பாக அப்பகுதி மக்கள் புதிய தலைமுறையிடம் கருத்து தெரிவித்தனர்.

மக்கள் 1: ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிறது. இதுவரை இந்த தொகுதிக்கு யாரும் வரவில்லை. தற்போது டிடிவி தினகரன் எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் இடத்தை பூர்த்தி செய்யும் நபர் தினகரன் தான். மருதுகணேஷ் மற்றும் மதுசூதனன் ஆகிய இருவரும் ஆர்.கே நகரில் செல்வாக்கு பெற்றவர்கள் இல்லை என்பதால், அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் டிடிவி தினகரனுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. 

மக்கள் 2: அடித்தட்டு மக்களை விட கஷ்டப்படும் மக்கள் ஆர்.கே நகரில் உள்ளனர் என்பதால் தான் ஜெயலலிதா 2வது முறையாக ஆர்.கே நகரில் போட்டியிட்டு, மக்களின் நிலையை உயர்த்த நினைத்தார். ஆனால் தற்போது போட்டியிட்ட வேட்பாளர்களில் டிடிவி தினகரனிடம் தான் அந்த தகுதி உள்ளது.

மக்கள் 3: ஆர்.கே நகருக்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ ஆக தேர்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என நம்பி தேர்ந்தெடுத்துள்ளோம். பல துயரங்களையும் கடந்து அவர் தையரியமாக போட்டியிட்டுள்ளதால், அவரை மக்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளோம். அதேபோல் அவர் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார்.