டிரெண்டிங்

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றம்

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றம்

webteam

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி செயல்பட்டு வந்தார். தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி திமுக உள்பட ஏராளமான கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை வேலுச்சாமி நிராகரித்தது சர்ச்சையானதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த  வேலுச்சாமி மாற்றப்பட்டு  பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.