ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நவம்பர் 6 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போலி வாக்காளர்களை நீக்கிய பின் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதனையடுத்து, ஆர்.கே.நகர் வழக்கு நவம்பர் 6-ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.